Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து  26 சவரன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    


    திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். 
    ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (46). தனியார் நிறுவன ஊழியர். வழக்கம்போல் வியாழக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் சென்றாராம். பின்னர், மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. 
    உள்ளே பீரோவில் இருந்த 26 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai