Enable Javscript for better performance
28, 29-இல் இலவச மருத்துவ ஆலோசனை, பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சார்பில் இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 
    இதுதொடர்பாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
    திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கென முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்கள் நடைபெற உள்ளன.
    அதன்படி, ஆகஸ்ட் 28-ஆம் தேதி திருவள்ளூர், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, புழல், பூண்டி, மீஞ்சூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் 29-ஆம் தேதி திருவாலங்காடு, வில்லிவாக்கம், பூந்தமல்லி, திருத்தணி, சோழபுரம், எல்லாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. 
    இந்த முகாமில் ரத்த சுத்தகரிப்பு, பொது மருத்துவம், இருதய நோய், எலும்பு முறிவு, புற்றுநோய், இருதய அறுவை சிகிச்சை, கண் தொடர்பான நோய்களுக்கு அரசு மற்றும் அங்கிகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளின் மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை, ஆலோசனை அளிக்க  உள்ளனர். 
    இந்த முகாமில் அந்தந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai