மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்துக்கு ரூ. 14.24 கோடி ஒதுக்கீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் மானிய விலையில் கருவிகள் மற்றும் இயந்திரங்களைப் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக உழவன்


திருவள்ளூர் மாவட்டத்தில் மானிய விலையில் கருவிகள் மற்றும் இயந்திரங்களைப் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம். இத்திட்டத்துக்காக ரூ. 14.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  விவசாயப் பணிகள் மேற்கொண்டாலும் போதிய பல்வேறு பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு வேளாண் இயந்திர வாடகைக்கு வழங்கும் மையம் ஆக்குவதால் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றவும் முடியும். இதற்காக வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
 அதன்படி, நிகழாண்டில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் இயந்திர கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையத்தை மானிய விலையில் அமைத்தல் போன்ற பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 8 குதிரைத் திறன் கொண்ட டிராக்டர்கள், பவர் டில்லர், நெல் நடவு செய்யும் இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுவடை இயந்திரம், உழவு பணிகள் மேற்கொள்ள சுழல் கழப்பை, விசை களையெடுப்பான், விதைக்கும் கருவி, கால்நடைகளுக்கு தட்டை வெட்டும் கருவி, கதிர் அறுவடை இயந்திரம், ஒன்பது கொத்து கலப்பை முதலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
  இதற்காக திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மூலம் ரூ. 14.24 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. 
  இத்திட்டத்தில் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற முதலில் விவசாயிகள், உழவன் செயலியில் (மழஏஅயஅச ஹல்ல்) தனது ஆதார் எண்ணுடன் கட்டாயம் பதிவு செய்வது அவசியம். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் ஹஞ்ழ்ண்ம்ஹஸ்ரீட்ண்ய்ங்ழ்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இணைக்கப்படும். எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும், தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சு வார்த்தை மூலம் பேரம் பேசி குறைக்கலாம். குறைக்கப்பட்ட விலைக்கு உரிய மானியம் இணையதளத்திலேயே கணக்கிடப்படும். 
 ஏற்கெனவே 2018-19-ஆம் ஆண்டில் பதிவு செய்த முன்னுரிமை விண்ணப்பங்கள் நிகழாண்டில் ஏற்கப்படமாட்டாது. எனவே, இந்தாண்டுக்கான விண்ணப்பங்கள் புதிதாக பதிவு செய்ய வேண்டும். வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் வாயிலாக அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் மானிய உதவியுடன் அமைக்கப்படுகிறது. 
விவசாயிகள், விவசாயக் குழுக்கள் அல்லது தொழில் முனைவோர் ஆகியோர் பயனாளிகள் ஆவர். இதற்கு ரூ. 25 லட்சம் மதிப்புடைய வாடகை மையங்கள் அமைக்க 40 சதவீதம் மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை மானியம் இரு தவணைகளாக வழங்கப்படும். 
 சிறு, குறு எஸ்.சி, எஸ்.டி. பெண் விவசாயிகளுக்கு கருவிகள் வாங்கியவுடன் ரூ. 7 லட்சமும், நான்கு ஆண்டுகள் நல்ல முறையில் இயங்கி வருவதை கண்காணித்த பிறகு மீதமுள்ள ரூ. 3 லட்சமும் மானியமாக வழங்கப்படும். இதர விவசாயிகள் விவசாயக் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு கருவிகள் வாங்கியவுடன் ரூ. 5 லட்சமும், 4 ஆண்டுகளுக்கு நல்ல முறையில் இயங்குவதை கண்காணித்த பிறகு, மீதமுள்ள ரூ.5 லட்சமும் மானியமாக வழங்கப்படும்.
  இது தொடர்பாக திருவள்ளூரில் செயல்பட்டு வரும் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளரை நேரில் அணுகி தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com