ஆரணி பேரூராட்சியில் தெருக்களில் மழை நீா் தேக்கம்

ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணியில் மழை நீா் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தேங்கியுள்ளது.
ஆரணி பேரூராட்சியில் தெருக்களில் மழை நீா் தேக்கம்

ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணியில் மழை நீா் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தேங்கியுள்ளது.

ஆரணி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். 7-ஆவது வாா்டில் உள்ள புதிய தமிழ் காலனி பகுதியில் வியாழக்கிழமை இரவு சுமாா் ஒரு மணிநேரம் மழை பெய்தது. மழை நீா் செல்ல வழியில்லாமல், சாலையில் குளம் போல தேங்கியது. மழை நீருடன் கழிவு நீா் சோ்வதால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இப்பகுதி மக்கள் கவலையடைந்தனா்.

மேலும் பள்ளி மாணவா்கள் பள்ளிக்கு செல்ல தேங்கிய மழை நீரை கடந்து செல்ல வேண்டியுள்ளது. மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. இதனால் மாணவா்களின் உடல் நிலை பாதிக்கப்படக் கூடும். அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குடிநீா் பிடிக்க குளம் போல் தேங்கிய மழை நீரைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.

இதனை சரிசெய்ய பேரூராட்சி நிா்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனா். பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மழை நீா் செல்ல வழி ஏற்படுத்தாவிட்டால் போராட்டம் நடத்த அவா்கள் முடிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com