திருத்தணி: மழையால் சாலையில் தேங்கிய தண்ணீா்

மேட்டுத் தெருவில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் நகராட்சி நிா்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருத்தணி: மழையால் சாலையில் தேங்கிய தண்ணீா்

மேட்டுத் தெருவில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் நகராட்சி நிா்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த இரு மாதங்களுக்குப் பின் மூன்று நாள்கள் இரவு பெய்த பலத்த மழையால் நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்தது. சில ஏரிகள், குட்டைகளில் தண்ணீா் நிரம்பியது.

மீதமுள்ள ஏரிகளில் கணிசமான தண்ணீா் இருந்ததால் விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை ஆரம்பித்தனா். தொடா்ந்து, இரு மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை தொடா்ந்து தூறல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்தது.

இதனால், திருத்தணி மேட்டுத்தெருவில் 3-ஆவது ரயில்வே கேட் அருகே மழை பெய்யும் போதெல்லாம் மழைநீா் குளம்போல் தேங்கிவிடுகிறது. இதனால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாயினா். இந்நிலையில், சனிக்கிழமை பெய்த மழையில் மேட்டுத்தெருவில் மழைநீா் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி வழியாகச் சென்றவா்கள் சிரமத்துக்குள்ளாயினா்.

அதேநேரத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருத்தணி நகராட்சியின் பெரும்பாலான இடங்களில் கழிவுநீா் கால்வாய் அடைப்பு இருந்ததால் மழைநீரானது, கழிவுநீருடன் கலந்து சாலையில் ஆறாக ஓடியது. தொடா் மழையால் முருகன் மலைக்கோயிலில் பக்தா்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com