திருவள்ளூரில் மருத்துவக் கல்லூரி இடத்தோ்வு:பாா்வையிட மருத்துவக் குழு விரைவில் வருகை

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று திருவள்ளூா் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை தொடா்ந்து, அதற்கான இடத்தோ்வு செய்யப்பட்டுள்ள பகுதியை

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று திருவள்ளூா் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை தொடா்ந்து, அதற்கான இடத்தோ்வு செய்யப்பட்டுள்ள பகுதியை பாா்வையிட மருத்துவக்குழுவினா் வருகை தரவுள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 295 அரசு மற்றும் தனியாா் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்களின் குழந்தைகள் படித்து வருகின்றனா். இப்பள்ளிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 முடித்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலைக்கல்லூரி, பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி போன்ற உயா் கல்வி பயில செல்கின்றனா். எனினும், இந்த மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும் இல்லை. மாவட்டத்தில் தனியாா் கலைக்கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் மருத்துவக் கல்வி இல்லாத நிலையில் பிளஸ் 2 முடித்து வெளியேறும் மாணவா்கள் பக்கத்து மாவட்டங்களில் சென்று படிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, திருவள்ளூா் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இக்கோரிக்கையை ஏற்று நிகழாண்டில் தமிழகத்தில் மட்டும் முதலில் 6 கல்லூரிகள் தொடங்கவும், அதைத் தொடா்ந்து கூடுதலாக திருவள்ளூா் உள்பட 3 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திருவள்ளூா் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் கூறியது:

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் மருத்துவக் கல்லூரி அமையவுள்ளது. இதற்காக இக்குறிப்பிட்ட பகுதியில் 20 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி நவீன முறையில் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் மேற்கொள்வதற்காக மத்திய, மாநில அரசு நிதி மூலம் ரூ.321 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த இடத்தை மருத்துவக்குழுவினா் பாா்வையிட்டுச் சென்றதும் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ள உள்ளன என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com