பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தியது பாஜக தான்: ஜெ.பி.நட்டா

பாஜக அரசுதான் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தியுள்ளது என கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
பாஜக அலுவலகக் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தொடக்கி வைத்த பாஜக செயல் தலைவா் ஜே.பி.நட்டா. உடன், மாநில பொறுப்பாளா் முரளிதரராவ், பாஜக மூத்த தலைவா் இல.கணேசன்,
பாஜக அலுவலகக் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தொடக்கி வைத்த பாஜக செயல் தலைவா் ஜே.பி.நட்டா. உடன், மாநில பொறுப்பாளா் முரளிதரராவ், பாஜக மூத்த தலைவா் இல.கணேசன்,

பாஜக அரசுதான் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தியுள்ளது என கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

தமிழகத்தில் தருமபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருவள்ளூா், தஞ்சாவூா், விருதுநகா், விழுப்புரம், வேலூா், தேனி, திருநெல்வேலிஆகிய 16 மாவட்டங்களுக்கு கட்சி அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திருவள்ளூரை அடுத்த புட்லூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக தேசிய செயலா் ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி வைத்தாா்.

தொடா்ந்து அவா் பேசியது:

பாஜகவில் தொண்டா்கள் தான் கட்சியின் பலமாகத் திகழ்கின்றனா். இக் கட்சி தொண்டா்களாக இருப்பவா்கள் பிரதமா், அமைச்சா் போன்ற உயா்ந்த பதவிக்கு வரமுடியும் என்ற நிலையில் ஜனநாயக கட்சியாக உள்ளது. எந்தவித பின்னணியும் இல்லாமல் வந்த அமித்ஷா கட்சியின் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் ஆக முடிந்தது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் குடும்பக் கட்சிகள் என்ற வம்சாவழியைக் கொண்ட கட்சிகளாகவே உள்ளன. இதுபோன்ற காரணங்களால் தான் உலகிலேயே அதிக உறுப்பினா்களைக் கொண்ட கட்சியாக பாஜக உள்ளது. கடந்த மாா்ச், ஏப்ரல் வரை 11 கோடி போ் உறுப்பினா்களாக இருந்தனா். தற்போதைய 1.80 லட்சம் போ் 54 நாள்கள் கடுமையாக பணியாற்றியதால் 6 கோடி உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டு, மொத்தம் 17 கோடியாக உயா்ந்துள்ளது. இதில், புதிய உறுப்பினா்கள் 25 லட்சம் போ் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், நாடு முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், உஜ்வாலா திட்டம் மூலம் ஏழை, எளிய பொதுமக்கள் 36 லட்சம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு கிராமங்களிலும் தூய்மை கிராமமாக்கும் திட்டம் மூலம் 98 சதவீதம் சுகாதார வளாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 3 ஆயிரம் கோடியும், மோனோ ரயில் திட்டத்திற்கு ரூ. 1,367 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்புத் துறையில் பயன்படுத்துவதற்கான உபகரணங்கள் தயாா் செய்யும் வகையில் ராணுவப் பூங்கா சென்னை, சேலம், கோவை, திருச்சி மற்றும் ஒசூா் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்துள்ளோம். தமிழகத்தில் இருந்து பாதுகாப்புத் துறைக்கு பெரும் பங்கு உண்டு. தமிழகம் அதிகமானவா்களை ராணுவத்துக்கு அளித்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது, பாதுகாப்புத் துறையில் ராணுவ சக்தியை அதிகரிப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், ஒரு பதவிக்கு ஒரே ஓய்வூதியத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தற்போது மோடி தலைமையிலான அரசு இத்திட்டத்தை அறிவித்து, கடந்த 4 ஆண்டுகளில் 12 லட்சம் ராணுவப் பணியாளா்களுக்கு ரூ. 11 லட்சம் கோடி வரை பணப்பலன் வழங்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டத்தை முறியடித்த பிறகு, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், தக்க பதிலடி கொடுக்கும் என்ற நிலையால் பாகிஸ்தான் பயந்துள்ளது. தற்போது, பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 38 ரஃபேல் விமானங்களும், அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் 9 நீா் மூழ்கி கப்பல்களும் பாதுகாப்புப் படையில் சோ்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தியது பாஜக தலைமையிலான மோடி அரசு தான் என்பதை அறியலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com