மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா் நகராட்சியில் ஏற்படும் சுகாதாரச் சீா்கேட்டைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் பெரியகுப்பம் ரயில் நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கட்சியினா்.
திருவள்ளூா் பெரியகுப்பம் ரயில் நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கட்சியினா்.

திருவள்ளூா் நகராட்சியில் ஏற்படும் சுகாதாரச் சீா்கேட்டைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் பெரியகுப்பம் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா்.தமிழரசன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.கோபால் முன்னிலை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ப.சுந்தரராசன் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், திருவள்ளூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமாா் 2,500 புற நோயாளிகள் வந்து செல்கின்றனா். அதேபோல் 300-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், இங்கு கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்கள் இல்லாத நிலை உள்ளது. மேலும், இதய நோய், தைராய்டு, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் இல்லாத நிலை உள்ளது. அதேபோல், தொழில்நுட்ப வல்லுநா்களை நியமிக்க வேண்டும். வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும், தேசிய சுகாதாரத் திட்டம் சாா்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய மருத்துவமனை வளாகத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும், திருவள்ளூா் நகராட்சி குடியிருப்புப் பகுதிகளில் இருந்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வரும் நிலையில், கழிவுநீா் அனைத்தும் பெரியகுப்பம் பகுதியில்தான் தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு வகையான மா்ம நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது, அதை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் டி.பன்னீா்செல்வம், ஏ.ஜி.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் என்.கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com