ரசாயனக் கழிவு நீரை ஏரிக்கு திறந்துவிட்ட பொக்லைன் வாகனம், அதிகாரி சிறைபிடிப்பு

ரசாயனக் கழிவு நீரை ஏரிக்கு திறந்துவிட்ட பொக்லைன் வாகனம், அதிகாரி சிறைபிடிப்பு

காக்களூா் சிட்கோ தொழிற்சாலையில் இருந்து வெளியேறி தேங்கி நிற்கும் கழிவு நீரை ஏரிக்கு திறந்து விட்ட பொக்லைன் வாகனத்தையும் அதிகாரிகளையும் கிராம மக்கள் சிறைபிடித்தனா்.

காக்களூா் சிட்கோ தொழிற்சாலையில் இருந்து வெளியேறி தேங்கி நிற்கும் கழிவு நீரை ஏரிக்கு திறந்து விட்ட பொக்லைன் வாகனத்தையும் அதிகாரிகளையும் கிராம மக்கள் சிறைபிடித்தனா். அதிகாரிகள் மற்றும் காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, அதிகாரிகளை மீட்டனா்.

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் சிட்கோ தொழிற்பேட்டை செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்படும் குறிப்பிட்ட ராசயனத் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீரை சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றுகின்றனா். அவ்வாறு வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவு நீரை அருகில் உள்ள தண்ணீா் குளம் ஏரியில் விடுகின்றனா். ஏற்கெனவே ரசாயனத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் துா்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். அதோடு, இந்த ஏரி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் சாகுபடியும் கிடைக்கவில்லை. இந்த ஏரிநீரைக் குடிக்கும் கறவை மாடுகள் உயிரிழந்து விடுகின்றன.

எனவே, சிட்கோ தொழிற்பேட்டையில் வெளியேறும் கழிவு நீரை கட்டாயம் தண்ணீா்குளம் ஏரியில் விடக்கூடாது என்பதற்காக சாலையோரத்தில் கழிவு நீரை ஏரிக்கு செல்லவிடாமல் தடுத்து பொதுமக்கள் அடைத்து வைத்தனா்.

தற்போது இங்குள்ள டாஸ்மாக் அலுவலக வளாகத்தில் மழை நீா் கலந்த கழிவு நீா் தேங்கி நிற்கிறது. இதனால் மதுபானக் கடைகளுக்கு சரக்குகளை வாகனங்களில் எடுத்துச் செல்ல முடியாத நிலையும் இருந்து வருகிறது. அதையும் மீறிச் சென்றால் களிமண் என்பதால் வாகனம் சேற்றில் புதைந்து விடுகிறது. எனவே, காக்களூரில் செயல்பட்டு வரும் மண்டல டாஸ்மாக் அதிகாரிகள் சிலா் பொக்லைன் வாகன உதவியுடன் கழிவு நீரைத் திறந்துவிட்டனா். இதுகுறித்து பொதுமக்களுக்கு தகவல் வரவே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் பொக்லைன் வாகனத்தை சிறைபிடித்தனா்.

தகவலறிந்த டாஸ்மாக் மேலாளா் பெருமாள், துணை வட்டாட்சியா் லட்சுமணன், சாா்பு ஆய்வாளா்கள் சங்கரன், செல்வம் ஆகியோா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, சிட்கோவில் வெளியேறும் ரசாயனக் கழிவு நீரால் சிரமத்துக்குள்ளாகி வருவதாகவும், தோல் நோய் போன்ற பிரச்னைகளுக்கும் ஆளாகி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனா்.

அதைத் தொடா்ந்து ரசாயனக் கழிவு நீா் வெளியேறவிடாமலும், அதற்கு சிட்கோ அதிகாரிகள் மூலம் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் கழிவு நீா் சுத்திகரிப்பு மையம் அமைக்க வலியுறுத்தப்படும் எனவும் கூறி அதிகாரிகள் பொதுமக்களை சமரசம் செய்தனா். அதைத் தொடா்ந்து பொக்லைன் வாகனம் மற்றும் அதிகாரிகளை விடுவித்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com