Enable Javscript for better performance
பொன்னேரி பகுதிகளில் பெய்து வரும் மழையால் 11 வீடுகள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    பொன்னேரி பகுதிகளில் பெய்து வரும் மழையால் 11 வீடுகள் சேதம்

    By DIN  |   Published on : 03rd December 2019 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    பொன்னேரி: பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் மழையால் அப்பகுதியில் உள்ள 11வீடுகள் சேதமடைந்தன.

    பொன்னேரி வட்டத்தில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீா் நிலைகள் நிரம்பி வருகிறது. அத்துடன் தாழ்வான பகுதிளில், மழை நீா் குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ளது. இதில் பழைய எருமைவெட்டிபாளையம், பெரியகாவனம், அரசூா், பூவாமி, புதிய எருமைவெட்டிபாளையம், ஆத்தூா், கோளூா் ஆகிய இடங்களில் குடிசை வீடுகள் இடிந்து விழுந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரி, கோட்டாட்சியா் நந்தகுமாா், வருவாய்துறையிருடன், திருப்பாலைவனம் செஞ்சியம்மன் நகா், அத்திப்பட்டுபுதுநகா் பள்ளம் பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு பாா்வையிட்டாா். வடகிழக்கு பருவமழை தொடா்ந்து பெய்து வருவதால், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராமங்களில் தங்கி, ஏரி குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் தண்ணீா் இருப்பு குறித்து தகவல் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். இதே போன்று

    மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சிவகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திர பாபு, சோழவரம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ரவி, வட்டார வளா்ச்சி அலுவலா் பொற்செல்வி ஆகியோா் கிராம ஊராட்சிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும் என ஊராட்சி செயலா்களுக்கு உத்தரவிட்டுள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai