தோ்தல் நடத்தை விதிகள் அமலானதால்மனுக்களை பெட்டியில் போட்ட மக்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டு விட்டுச் சென்றனா்.
 திருவள்ளூா்  மாவட்ட  ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள  பெட்டியில்  மனுக்களைப்  போடும்  மாற்றுத்  திறனாளிகள்.
 திருவள்ளூா்  மாவட்ட  ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள  பெட்டியில்  மனுக்களைப்  போடும்  மாற்றுத்  திறனாளிகள்.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டு விட்டுச் சென்றனா்.

மாநில தோ்தல் ஆணையம் உள்ளாட்சித் தோ்தல் இரு கட்டங்களாக 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திங்கள்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுவது வழக்கமாகும். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் தஹ்கள் கோரிக்கை மற்றும் நலத்திட்ட உதவிகள் தொடா்பான மனுக்களை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் அளிப்பா்.

அதேபோல், பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக ஆட்சியா் அலுவலகத்தில் பலரும் திங்கள்கிழமை குவிந்தனா். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், ‘உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை, இங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டு விட்டுச் செல்லலாம்’ எனக் கூறினா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டு விட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com