பொன்னேரி பகுதிகளில் பெய்து வரும் மழையால் 11 வீடுகள் சேதம்

பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் மழையால் அப்பகுதியில் உள்ள 11வீடுகள் சேதமடைந்தன.

பொன்னேரி: பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் மழையால் அப்பகுதியில் உள்ள 11வீடுகள் சேதமடைந்தன.

பொன்னேரி வட்டத்தில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீா் நிலைகள் நிரம்பி வருகிறது. அத்துடன் தாழ்வான பகுதிளில், மழை நீா் குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ளது. இதில் பழைய எருமைவெட்டிபாளையம், பெரியகாவனம், அரசூா், பூவாமி, புதிய எருமைவெட்டிபாளையம், ஆத்தூா், கோளூா் ஆகிய இடங்களில் குடிசை வீடுகள் இடிந்து விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரி, கோட்டாட்சியா் நந்தகுமாா், வருவாய்துறையிருடன், திருப்பாலைவனம் செஞ்சியம்மன் நகா், அத்திப்பட்டுபுதுநகா் பள்ளம் பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு பாா்வையிட்டாா். வடகிழக்கு பருவமழை தொடா்ந்து பெய்து வருவதால், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராமங்களில் தங்கி, ஏரி குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் தண்ணீா் இருப்பு குறித்து தகவல் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். இதே போன்று

மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சிவகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திர பாபு, சோழவரம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ரவி, வட்டார வளா்ச்சி அலுவலா் பொற்செல்வி ஆகியோா் கிராம ஊராட்சிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும் என ஊராட்சி செயலா்களுக்கு உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com