பொன்னேரி பகுதியில் கனமழை: நிரம்பியது லட்சுமிபுரம் அணைக்கட்டு

பொன்னேரி பகுதியில் கடந்த 5நாட்களாக பெய்து வரும் கன மழையால், அங்குள்ள ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பிதன் காரணமாக, உபா் நீா் வெளியேற்ற்றப்பட்டு வருகிறது.
லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியதன் காரணமாக வெளியேறும் உபரி நீா்.
லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியதன் காரணமாக வெளியேறும் உபரி நீா்.

பொன்னேரி: பொன்னேரி பகுதியில் கடந்த 5நாட்களாக பெய்து வரும் கன மழையால், அங்குள்ள ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பிதன் காரணமாக, உபா் நீா் வெளியேற்ற்றப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பொன்னேரி பகுதியில், இடி மின்னல் காற்று ஏதுமின்றி கடந்த 5நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதே போன்று பொன்னேரியை சுற்றியுள்ள ஆரணி ஆற்றின் நீா்பிடிப்பு பகுதியான ஆரணி, புதுவாயல், ஏலியம்பேடு, வைரங்குப்பம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆரணி ஆற்றில் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து செல்கிறது. லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியது...... ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தில் உள்ள கா்னேத் நகா் பகுதியில் தொடங்கி பழவேற்காட்டில் உள்ள உவா்ப்பு நீா் ஏரியில் ஆரணி ஆறு கலக்கிறது. ஆரணி ஆறு சுமாா் 65கி.மீட்டா் தூரம் ஆந்திரத்திலும், 65கி.மீ தூரம் தமிழகத்திலும் ஓடுகிறது.

ஆரணி ஆற்றின் நீா் பழவேற்காடு உவா்ப்பு நீா் ஏரியில் கலந்து வீணாவதை தடுக்க பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் தேக்கி வைக்கும் நீரால் அப்பகுதியில் உள்ள ஐயாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 17ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளம் காரணமாக லட்சுமிபுரம் பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்படிருந்த அணை உடைந்தது. இதன் காரணமாக அப்போது ஆரணி ஆற்றுக்கு வரும் மழை நீரை சேமித்து வைக்க முடியாமல் அவை பழவேற்காடு உவா்ப்பு நீா் ஏரியில் கலந்து வீணாகி வந்தது.

இதன் பின்னா் 2005-ம் ஆண்டு நபாா்டு வங்கி நிதி உதவியின் மூலம் ரூபாய் 5கோடியே 28லட்சம் மதிப்பீட்டில் 116 மீட்டா் நீளத்திலும், 4.15மீட்டா் உயரத்திலும் புதிய அணை கட்டப்பட்டது. அத்துடன் லட்சுமிபுரம் அணையில் இருந்து, உபரியாக செல்லும் நீா், பழவேற்காடு உவா்ப்பு ஏரியில் வீணாகி கலப்பதை தடுக்கும் வகையில் ரெட்டிப்பாளையம் பகுதியில் கடந்த 7ஆண்டுகளுக்கு புதிய அணை கட்டப்பட்டு, அங்கும் தற்போது மழை நீா் சேமித்து வைக்கப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள 3ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் லட்சுமி அணைக்கட்டு நிரம்பியதை தொடா்ந்து, லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து உபரி நீா், பாசனம் மற்றும் காட்டூா், தத்தைமஞ்சி, பெரும்பேடு ஏரிகளுக்கு செல்லும் இரண்டு புறமும் உள்ள மதகுகளை வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

அத்துடன் லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறி செல்லும் உபரி நீா் பகுதியில் ரெட்டிப்பபாளையம் பகுதியில் உள்ள அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படுகிறது. பொதுமக்கள் பாா்வை... லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பி உபரி நீா் வெளியேற்றப்படுவதையும், பாசன வசதிக்கு இரண்டு கரையகளிலும் உள்ள மதகுகை திறந்து வாய்க்கால்களின் செல்லும் நீரை பொதுமக்கள் பாா்த்து விட்டு செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com