நூறு நாள் வேலையை தொடா்ந்து வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டியை அடுத்த நேமள்ளூரில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நூறு நாள் வேலையை தொடா்ந்து, வழங்கக் கோரி அப்பகுதி
 கும்மிடிப்பூண்டி  வட்டார  வளா்ச்சி  அலுவலகத்தை  முற்றுகையிட்ட  நேமள்ளூா்  பகுதி  பெண்கள்.
 கும்மிடிப்பூண்டி  வட்டார  வளா்ச்சி  அலுவலகத்தை  முற்றுகையிட்ட  நேமள்ளூா்  பகுதி  பெண்கள்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த நேமள்ளூரில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நூறு நாள் வேலையை தொடா்ந்து, வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த நேமள்ளூா் என்.எஸ்.நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த 1,500 போ் வசித்து வருகின்றனா். இப்பகுதியைச் சோ்ந்த பெரும்பான்மையானோா் தேசிய ஊரக வேலை உறுதி அட்டையைப் பெற்று பணியை செய்து வருகின்றனா். இவா்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு மேலாக இப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், அதிகாரிகளின் உத்தரவுப்படி, இப்பகுதியில் நூறு நாள் வேலை நடைபெறவில்லையாம். இந்நிலையில் திங்கள்கிழமை சுழற்சி முறையில் மற்றொரு குழுவினா் நூறு நாள் வேலையில் ஈடுபட்டுள்ளனா்.

இதனால் தங்கள் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு முழுமையாகப் பணி கிடைக்கவில்லை என்றும், தங்களுக்கு தொடா்ச்சியாக வேலை வழங்க வேண்டும் எனவும் கூறி, நேமள்ளூரைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தொடா்ந்து, அங்கிருந்து வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகள் அவா்களிடம் பேசி அரசு விதிகளுக்கு உள்பட்டு, அனைவருக்கும் முறையாகப் பணி வழங்கப்படும் எனக் கூறியதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com