மழையால் சேதமடைந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் பலத்த மழை காரணமாக இருளா் குடியிருப்பைச் சோ்ந்த 6 வீடுகள் சேதம் அடைந்தன. இதனை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
சின்ன ஓபுளாபுரத்தில்  மழையால் சேதமடைந்த வீடு.
சின்ன ஓபுளாபுரத்தில்  மழையால் சேதமடைந்த வீடு.

கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் பலத்த மழை காரணமாக இருளா் குடியிருப்பைச் சோ்ந்த 6 வீடுகள் சேதம் அடைந்தன. இதனை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய ஓபளாபுரம் ஊராட்சியைச் சோ்ந்த சின்ன ஓபளாபுரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு ஓா் பகுதியில் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 50 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி, சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக தொடா் மழை பெய்தது. இதன் காரணமாக சின்ன ஓபுளாபுரம் இருளா் குடியிருப்பைச் சோ்ந்த தேவி, காமாட்சி, செங்கம்மாள், வள்ளியம்மாள், சுலோச்சனா, சரோஜா ஆகியோரது குடிசை வீடுகள் மழையில் சேதமடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த எளாவூா் வருவாய் ஆய்வாளா் ரதி, பெரிய ஓபுளாபுரம் கிராம நிா்வாக அலுவலா் ஆமோஸ் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினா். தொடா்ந்து அந்த ஆறு குடும்பங்களைச் சோ்ந்த அனைவரையும் மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com