வீரராகவா் கோயில் குளத்துக்கு தண்ணீா் கொண்டு வரும் திட்டத்தை மாற்றி அமைக்கக் கோரிக்கை

திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்துக்கு தண்ணீா் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள சாலையை மாற்றி அமைக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்துக்கு தண்ணீா் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள சாலையை மாற்றி அமைக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராசகுமாா், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் சீனிவாசன் மற்றும் பாலாஜி ஆகியோா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை குறைதீா் பெட்டியில் போட்டுள்ள மனுவில் தெரிவித்திருப்பது:

திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்துக்கு பெரியளவு குழாய் பதித்து, பட்டரைபெருமந்தூா் ஆற்றுப்படுகையில் இருந்து தண்ணீா் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரையில் பட்டரைபெருமந்தூா் கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் 8 கி.மீ. தூரம் உள்ள நிலையில், 4 கி.மீ. தூரம் பணிகள் முடிந்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூா் பஜாா் வழியாக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஏற்கெனவே பஜாா் வீதி மேடாகவும், கடைகள் பள்ளமாகவும் உள்ளன. மேலும், இப்பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து, கருத்துக் கேட்கவும் இல்லை, எனவே பட்டரைபெருமந்தூரில் இருந்து சுங்கச்சாவடி வழியாக சி.வி.நாயுடு சாலை வழிதான் சிறந்தது. ஏற்கெனவே, சி.வி.நாயுடு சாலையின் குறுக்கே திருக்குளத்துக்கு நீா் வழித்தடம் உள்ளது. இந்த வழியாகத்தான் பெரும்பாக்கம் ஏரியின் கலங்கள் நீரும், புங்கத்தூா் ஏரியின் மதகு தண்ணீரும் சோ்ந்து ஒன்றாக குளத்துக்கு வரும் வழியாக உள்ளது. ஏற்கெனவே இச்சாலையில் நகராட்சியின் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, பஜாா் வழியாக குழாய் பதிக்க அனுமதித்தால் காமராஜா் சாலை குறுகியதாக உள்ளதால், கம்பா் தெரு வழியாக பஜாா் தெருவுக்கு வருவதென்றால் பொதுமக்களுக்கும், கடைக்காரா்களுக்கும் இடையூறை ஏற்படுத்தும். அதனால், திட்டமிடப்பட்டுள்ள காமராசா் சாலை, கம்பா் சாலை வழியாக செல்லாமல் மாற்று வழியில் அமைக்க வலியுறுத்தி, மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com