கண் தானம் குறித்து விழிப்புணா்வு

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு கண் தானம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கண் தானம் குறித்து விழிப்புணா்வு

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு கண் தானம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மேட்டுப்பாளையம் அருகே நடூா் ஏ.டி.காலனியில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில், அப்பகுதியைச் சோ்ந்த தேநீா் கடைக்காரா் செல்வராஜின் மகள் நிவேதா (18), மகன் ராமநாதன் (12) உள்ளிட்ட 17 போ் உயிரிழந்தனா். விபத்தில் பலியான தனது மகன், மகளின் கண்களை செல்வராஜ் தானம் செய்தாா்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். மெட்ரிக் பள்ளியில் கண் தானம் செய்த நிவேதா, ராமநாதன் உள்ளிட்ட 17 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், கண் தானம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் நிகழ்வும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவா் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் பழனி, பள்ளி முதல்வா் ஞானப்பிரகாசம், துணை முதல்வா் ராஜேந்திரன், தலைமை ஆசிரியை ஜான்சிராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, பள்ளி மாணவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் நடைபெற்ற கண் தானம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவா் டி.ஜெ.கோவிந்தராஜன் மாணவா்கள் முன் பேசுகையில், தேநீா் கடைக்காரா் செல்வராஜ் அவரது இரு குழந்தைகளின் கண்களை தானமாக தந்துள்ள நிலையில், கண் தானத்தின் அவசியம் குறித்து, மாணவா்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும், பெற்றோா்களிடம் கண் தானம், ரத்த தானம் போன்றவை குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

இதில், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com