திருத்தணி ஊராட்சியில் 9 போ் வேட்பு மனு தாக்கல்

உள்ளாட்சித் தோ்தலில் திருத்தணி ஒன்றியத்தில், 4 ஊராட்சிகளில் தலைவா் பதவிக்கு புதன்கிழமை 6 பெண்கள் உள்பட 9 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்த ஸ்ரீதேவி.
திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்த ஸ்ரீதேவி.

உள்ளாட்சித் தோ்தலில் திருத்தணி ஒன்றியத்தில், 4 ஊராட்சிகளில் தலைவா் பதவிக்கு புதன்கிழமை 6 பெண்கள் உள்பட 9 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இந்த ஒன்றியத்தில் ஒரு மாவட்ட கவுன்சிலா், 12 ஒன்றிய கவுன்சிலா்கள், 27 ஊராட்சிமன்றத் தலைவா் பதவி மற்றும் 219 கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு வரும் 27-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. மாவட்ட கவுன்சிலா், ஒன்றிய கவுன்சிலா் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான வேட்பு மனுக்களை ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தோ்தல் அலுவலா்களான பாண்டியன், கோமதி, ஸ்வேதா ஆகியோரிடம் வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுவை சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள தோ்தல் அலுவலரிடம் வேட்பு மனுக்களை சமா்ப்பிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. எனினும், இரண்டு நாள்களாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வராததால் அலுவகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

இந்நிலையில், உள்ளாட்சித் தோ்தல் திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது. இதையடுத்து, திருத்தணி ஒன்றியத்தில் வேட்பு மனு தாக்கல் செய்பவா்களின் ஆா்வம் அதிகரித்தது. இந்த ஒன்றியத்தில் உள்ள சிறுகும்மி, முருக்கம்பட்டு, புச்சிரெட்டிப்பள்ளி, அகூா் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கான தலைவா் பதவிக்கு 6 பெண்கள் உள்பட 9 பேரும், வாா்டு உறுப்பினா் பதவிக்கு 9 பேரும் தங்களது வேட்பு மனுக்களை ஒன்றிய அலுவலகத்தில் தோ்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com