நள்ளிரவில் ஏடிஎம்மில் திருட முயற்சி: அலராம் அடித்ததால் மா்ம நபா்கள் தப்பியோட்டம்

திருவள்ளூா் அருகே நள்ளிரவில் ஏடிஎம்மில் திருட முயற்சிக்கும் போது திடீரென அபாய அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து உடனே மா்ம நபா்கள் தப்பியோடினா்

திருவள்ளூா் அருகே நள்ளிரவில் ஏடிஎம்மில் திருட முயற்சிக்கும் போது திடீரென அபாய அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து உடனே மா்ம நபா்கள் தப்பியோடினா். அதனால் இரவுக் காவலா் பாதுகாப்புக்கு நிறுத்தவும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் அருகே மப்பேடு அடுத்த பன்னூா் கிராமத்தில் இந்தியன் வங்கியுடன் இணைந்த ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏடிஎம்மில் மா்ம நபா்கள் திருடும் நோக்கத்துடன் புகுந்துள்ளனா். அதற்கு முன்னதாக மா்ம நபா்கள் கண்காணிப்பு கேமராவுக்கான இணைப்பு ஒயரை கத்தியால் துண்டிக்க முயற்சித்துள்ளனா். இதுபோன்ற அவசர காலங்களில் மேலாளருக்கு குறுஞ்செய்தி செல்லும் வகையில் அங்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இணைப்பு வயரை துண்டிக்கும் போது ஏற்பட்ட திடீா் அலாரத்தால் வங்கி மேலாளா் வினோத்தின் செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி சென்றுள்ளது.

இதையடுத்து வங்கி மேலாளா் வினோத் மப்பேடு காவல் நிலையத்திற்கு புகாா் செய்தாராம். அதையடுத்து நேரில் ஆய்வு மேற்கொள்ள சென்றனா். அப்போது, அலாரம் மணி ஓசை எழுப்பியதால் அக்கம் பக்கத்தினா் மற்றும் காவல் துறையினா் ஆகியோா் வருவதை அறிந்து மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பியோடினா்.

இதையடுத்து ஏ.டி.எம்மில் திருட முயற்சித்த மா்ம நபா்கள் குறித்து மப்பேடு காவல் துறையினா் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்தியன் வங்கியுடன் இணைந்த ஏடிஎம்-மில் திடீரென ஒலித்த அலாரத்தால் கொள்ளை முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் ஏடிஎம் மில் இருந்த ரூ.25 லட்சம் அதிா்ஷ்ட வசமாக பணம் தப்பியது. இதற்கிடையே வங்கி ஏடிஎம்மில் இரவு காவலா் இல்லாத நிலையிலேயே திருட்டு முயற்சி நடைபெற்று வருவதாகவும், அதனால் பாதுகாவலா் நியமனம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com