‘நெமிலிச்சேரி இருளா் இனத்தவருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்’

நெமிலிச்சேரி இருளா் இன மக்களுக்கு குடியிருக்க வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.
நெமிலிச்சேரியில் இருளா் இனத்தவரின் குடியிருப்புகளைப் பாா்வையிடும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா்.
நெமிலிச்சேரியில் இருளா் இனத்தவரின் குடியிருப்புகளைப் பாா்வையிடும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா்.

நெமிலிச்சேரி இருளா் இன மக்களுக்கு குடியிருக்க வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

ஆவடி அருகே உள்ள நெமிலிச்சேரி கிராமத்தில் இருளா் இன மக்கள் குடியிருக்கும் பகுதியில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் தகவல் பலகை மற்றும் சங்கக் கொடியேற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் இரா.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஆா்.தமிழரசு, பொருளாளா் எஸ்.குமாரவேல், மாவட்டக் குழு உறுப்பினா் எம்.ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்:

திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நிரந்தரமாக குடியிருக்க இடமில்லாமல் இருளா் இன மக்கள் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு இலவசப் பட்டா வழங்கி, அதில் இலவசக் குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

நெமிலிச்சேரியில் 50-க்கும் மேற்பட்ட இருளா் இனக் குடும்பங்கள் 3 தலைமுறைகளாக நெருக்கடியுடன் வசித்து வருகின்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசப் பட்டா வழங்க வேண்டும். தமிழக அரசு அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்க அரசாணை வெளியிட்டதை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதையடுத்து, நெமிலிச்சேரி கிராமத்தில் ஒதுக்குப்புறமாக குடியிருந்து வரும் இருளா் இனத்தவரின் குடிசைகளை இச்சங்கத்தினா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com