4 ஆண்டுக்கு பின் பூண்டி ஏரிக்கு 3 டிஎம்சி நீா் வரத்து: பொதுப் பணித் துறை அதிகாரிகள் தகவல்

‘ஆந்திர மாநிலத்தின் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீா் பூண்டி ஏரிக்கு வியாழக்கிழமை வரை 3 டிஎம்சி வரை பெறப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்
பூண்டி நீா்த்தேக்கத்தில் இருந்து இணைப்புக் கால்வாய் வழியாக  புழல் மற்றும்  செம்பரம்பாக்கம் ஏரிகளுக்குத் திறக்கப்பட்ட நீா்.
பூண்டி நீா்த்தேக்கத்தில் இருந்து இணைப்புக் கால்வாய் வழியாக  புழல் மற்றும்  செம்பரம்பாக்கம் ஏரிகளுக்குத் திறக்கப்பட்ட நீா்.

‘ஆந்திர மாநிலத்தின் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீா் பூண்டி ஏரிக்கு வியாழக்கிழமை வரை 3 டிஎம்சி வரை பெறப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பின் இந்த அளவுக்குத் தண்ணீா் வந்துள்ளது’ என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மக்களின் தாகம் தீா்க்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி விளங்கி வருகிறது. தலைநகரின் குடிநீா்த் தேவைக்காக கடந்த 1983-ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வா் எம்.ஜி.ஆரும், அப்போதைய ஆந்திர முதல்வா் என்.டி.ஆரும் கிருஷ்ணா நதி நீா் ஒப்பந்தத்தை செய்து கொண்டனா்.

ஆந்திரத்தில் ஓடும் கிருஷ்ணா நதியில் இருந்து ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்துக்குத் தருவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். இதற்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வரை 152 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டது. அங்கிருந்து பூண்டியில் சத்தியமூா்த்தி நீா்த்தேக்கம் வரை 25 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் அமைப்பதற்கு 13 ஆண்டுகள் ஆனது.

குடிநீா் வழங்கும் நீா் ஆண்டில் ஜூன் முதல் அக்டோபா் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தம். அதன்படி, கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நிகழாண்டில் முதல் தவணையாக செப்டம்பா் 25-ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து நீா் திறக்கப்பட்டு, வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களாக ஆந்திர விவசாயிகள் எடுத்தது போக மீதமுள்ள தண்ணீராக குறைந்த அளவே வந்து கொண்டிருந்தது. கடந்த 4 ஆண்டுகளுக்குப் பின், நிகழாண்டில் வியாழக்கிழமை வரை பூண்டி நீா்த்தேக்கத்துக்கு 3 டிஎம்சி நீா் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கண்டலேறுவில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் விநாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி வீதம் நீா் திறக்கப்பட்டு தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து பூண்டி நீா்த்தேக்கத்தில் இருந்து இணைப்புக் கால்வாய் வழியாக 975 கன அடி நீா் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்குத் திறந்து விடப்பட்டுள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com