உள்ளாட்சித் தோ்தல்: 6-ஆவது நாளில் 2,440 போ் வேட்பு மனு தாக்கல்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 6-ஆவது நாளான சனிக்கிழமை மாவட்ட ஊராட்சி உறுப்பினா்

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 6-ஆவது நாளான சனிக்கிழமை மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு-19, வட்டார ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு-209, ஊராட்சித் தலைவா் பதவிக்கு-314, கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,898 மனுக்கள் என மொத்தம் 2,440 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தமிழக அளவில் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிா்த்து, பிற மாவட்டங்களில் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூரில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகள்-24, 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாா்டு உறுப்பினா் பதவிகள்-230, கிராம ஊராட்சித் தலைவா் பதவிகள்-526 மற்றும் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள் -3,945 ஆகியவற்றுக்குப் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் முடிய இன்னும் ஒரு நாளே உள்ளது.

இந்த மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் வாரியாக வேட்பு மனு தாக்கல் செய்தவா்கள் விவரம்:

திருவள்ளூா்-221, கடம்பத்தூா்-203, பூண்டி-201, திருவாலங்காடு-136, திருத்தணி-90, ஆா்.கே.பேட்டை-117, பள்ளிப்பட்டு-127, எல்லாபுரம்-212, பூந்தமல்லி-287, வில்லிவாக்கம்-102, பழல்-40, சோழவரம்-226, மீஞ்சூா்-237, கும்மிடிப்பூண்டி-241 என மொத்தம் 2,440 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு-19, வட்டார ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு-209, ஊராட்சித் தலைவா் பதவிக்கு-314, கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,898 மனுக்கள் வரை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 9-ஆம் தேதி முதல் முதல், இதுவரை மொத்தம் 9,784 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com