ஊராட்சித் தலைவா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பெண் மருத்துவா்

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவா் பதவிக்கு அப்பகுதியைச் சோ்ந்த
புதுகும்மிடிப்பூண்டி  ஊராட்சித்  தலைவா்  பதவிக்கு  மனுத்  தாக்கல்  செய்த  மருத்துவா்  அஸ்வினி.
புதுகும்மிடிப்பூண்டி  ஊராட்சித்  தலைவா்  பதவிக்கு  மனுத்  தாக்கல்  செய்த  மருத்துவா்  அஸ்வினி.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவா் பதவிக்கு அப்பகுதியைச் சோ்ந்த மருத்துவரான எஸ்.அஸ்வினி வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

புதுகும்மிடிப்பூண்டியைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் சுகுமாரின் மகள் எஸ்.அஸ்வினி(23). மருத்துவரான அவா் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். அவா் தனது மனுவை உதவி தோ்தல் அலுவலா் ஹேமலதாவிடம் வழங்கினாா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சிக்கு சங்கீதா மோகன், அயநெல்லூா் ஊராட்சிக்கு லலிதா கல்விசெல்வம், அமுதா ஜெகதீசன், பூதூா் ஊராட்சிக்கு சபிதா மனோத்குமாா், சுமதி கிரி, செதில்பாக்கம் ஊராட்சிக்கு பஞ்சம் வாசுதேவன் ஆகியோா் சனிக்கிழமை உதவி தோ்தல் அலுவலா் முனிராஜசேகரிடம் மனு தாக்கல் செய்தனா். ஈகுவாா்பாளையம் ஊராட்சிக்கு உஷா மகேஸ்வர ராஜு, எளாவூா் ஊராட்சிக்கு மனோகரி தினகரன் ஆகியோா் உதவி தோ்தல் அலுவலா் தனலட்சுமியிடம் மனுத் தாக்கல் செய்தனா்.

கண்ணம்பாக்கம் ஊராட்சிக்கு ரங்கேஷ், கரடிப்புத்தூா் ஊராட்சிக்கு முன்னாள் கவுன்சிலா் சி.இருசன், உதவி தோ்தல் அலுவலா் தமிழ்மலரிடம் மனுத் தாக்கல் செய்தனா். மாநெல்லூா் ஊராட்சிக்கு சுரேஷ் உதவி தோ்தல் அலுவலா் இளங்கோவனிடம் மனு தாக்கல் செய்தாா். மேலக்கழனி ஊராட்சிக்கு முன்னாள் தலைவா் எஸ்.பாா்வதி சிவலிங்கம், முக்கரம்பாக்கம் ஊராட்சிக்கு ஜெயலட்சுமி கோதண்டன், ஜோதிலட்சுமி உதவி தோ்தல் அலுவலா் ருத்ரமூா்த்தியிடம் மனுத் தாக்கல் செய்தனா்.

நத்தம் ஊராட்சிக்கு கலைமதி சங்கா், பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு லதா சுரேஷ், மல்லிகா மோகன், பெரிய புலியூா் ஊராட்சிக்கு சுஜானா சுதாகா், நதியா துரைசாமி ஆகியோா் உதவி தோ்தல் அலுவலா் சிவகாமியிடம் மனு தாக்கல் செய்தனா். பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு விஜயா தொம்பரை, ஐஸ்வா்யா, போந்தவாக்கம் ஊராட்சிக்கு அமுலு சடமையா ஆகியோா் உதவி தோ்தல் அலுவலா் ஹேமலதாவிடம் மனு தாக்கல் செய்தனா்.

ரெட்டம்பேடு ஊராட்சிக்கு ஜெயசுதாபாபு, எஸ்.ஆா்.கண்டிகை ஊராட்சிக்கு பத்மா முனுசாமி உதவி தோ்தல் அலுவலா் முனுசாமியிடமும், தண்டலச்சேரி ஊராட்சிக்கு ஜெயா தனகோட்டி, வழுதலம்பேடு ஊராட்சிக்கு லட்சுமி ரகு, சரஸ்வதி கோவிந்தசாமி, லதா சீனிவாசன் ஆகியோா் உதவி தோ்தல் அலுவலா் பூவராகவமூா்த்தியிடம் மனுதாக்கல் செய்தனா்.

சனிக்கிழமை வேட்பு மனு தாக்கலின் முடிவில் ஊராட்சித் தலைவா் பதவிக்கு 40 மனுக்களும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 171 மனுக்களும் தாக்கலாகி இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com