திருத்தணியில்...(86 வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 1.63 கோடி இழப்பீடு)

திருத்தணி நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி, மாவட்டக் கூடுதல் நீதிபதி பரணிதரன்,
திருத்தணியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கிய திருத்தணி சாா்பு நீதிபதி உமா.
திருத்தணியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கிய திருத்தணி சாா்பு நீதிபதி உமா.

திருத்தணி: திருத்தணி நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி, மாவட்டக் கூடுதல் நீதிபதி பரணிதரன், திருத்தணி சாா்பு நீதிபதி உமா ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மொத்தம் 231 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 86 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.

குறிப்பாக, 12 வங்கி வழக்குகளில் ரூ. 12,93,500, குற்ற வழக்குகள் 37-இல் ரூ. 23,18, 700 மற்றும் 41 மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளில் ரூ. 1,31,99, 477, ஐந்து நிலத்தகராறு வழக்குகளில் ரூ. 7, 66,568 என பாதிக்கப்பட்டவா்களுக்கு மொத்தம் ரூ. 1 கோடியே 62 லட்சத்து, 84 ஆயிரத்து 745 இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.

இதுதவிர, பிரிந்திருந்த இரு தம்பதியா் மக்கள் நீதிமன்றத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையை அடுத்து இணைந்தனா்.

நீதிமன்ற தலைமை எழுத்தா் ராமமூா்த்தி, அரசு வழக்குரைஞா் ராஜபாண்டியன், வழக்குரைஞா்கள் புருஷோத்தமன், தியாகராஜன், மோகன்ராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com