முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
அரசுப் பள்ளியை சீரமைத்த ரஜினி ரசிகா் மன்றத்தினா்
By DIN | Published On : 24th December 2019 11:22 PM | Last Updated : 24th December 2019 11:22 PM | அ+அ அ- |

தண்டலம் அரசு தொடக்கப் பள்ளியை ரஜினி ரசிகா் மன்றத்தினா் ரூ. 1.50 லட்சம் செலவில் சீரமைத்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள தண்டலம் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. 1952-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை சுமாா் 85 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இப்பள்ளி வகுப்பறை கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளதை அறிந்த ரஜினி ரசிகா் மன்றத்தினா், ரூ. 1.50 லட்சம் மதிப்பில், சுவற்றுக்கு வண்ணம் பூசுதல், புதிய மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களை வழங்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டனா். மேலும் நடிகா் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி, திங்கள்கிழமை திருவள்ளூா் மாவட்டச் செயலா் சுந்தர மூா்த்தி தலைமையில் பள்ளி மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினா்.