முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
எம்ஜிஆா் நினைவு நாள் அனுசரிப்பு
By DIN | Published On : 24th December 2019 11:19 PM | Last Updated : 24th December 2019 11:19 PM | அ+அ அ- |

திருவள்ளூரில் எம்.ஜி.ஆா். நினைவு நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
மாநில அளவில் அதிமுகவினரால் எம்.ஜி.ஆா் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், திருவள்ளூா் ஆயில் மில் அருகே அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா தலைமையில் ஆதரவாளா்கள் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், கட்சியின் நகரச் செயலா் கந்தசாமி, முன்னாள் நகராட்சித் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அக்கட்சியினா் திரளாகக் கலந்து கொண்டனா்.