சுடச்சுட

  

  கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது.
  விழாவுக்கு, டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் தமிழரசன் , நிர்வாக அலுவலர் ஏழுமலை, 
  டி.ஜே.எஸ். மெட்ரிக். பள்ளி முதல்வர் ஞானப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சுகாதா தாஸ் வரவேற்றார்.
  இதில், யோகாவில் உலக சாதனை படைத்த அம்ருதா ஆனந்த் பங்கேற்றார். தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களின் அணிவகுப்புக்குப் பின், விளையாட்டு ஜோதியை டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு தடகளப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. 
  மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai