207 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்: எம்எல்ஏ வழங்கினார்

மூன்று ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 207 பயனாளிகளுக்கு ரூ.68.50 லட்சம் திருமண நிதியுதவியுடன் தாலிக்குத்

மூன்று ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 207 பயனாளிகளுக்கு ரூ.68.50 லட்சம் திருமண நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கத்தை திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் செவ்வாய்க்கிழமை வழங்கினார். 
திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், மகளிர் திட்டம் மூலம் திருமண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாபு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், ஒன்றியப் பொறியாளர் சக்தி விநாயகமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். இதில், சிறப்பு அழைப்பாளராக திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் கலந்துகொண்டார். திருத்தணி ஒன்றியத்தில் 84 பயனாளிகள், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 57 பயனாளிகள், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 66 பயனாளிகள் என மொத்தம், 207 பேருக்கு தலா ஒரு சவரன் நகையையும், பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கு தலாரூ.25,000, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, தலா ரூ.50, 000 என மொத்தம் 68.50 லட்சத்தையும் அவர் வழங்கினார். அப்போது பி.எம்.நரசிம்மன் 
பேசியது:
வசதியற்றவர்களுக்கு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாயை அரசு வழங்கியது. தற்போது, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் சட்டப் பேரவையில் அறிவிக்கப்
பட்டுள்ளது. 
"தாலிக்குத் தங்கம்' திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இத்திட்டம் பெண்களைப் படிக்க வைத்து, அவர்களாலும் சொந்தக் காலில் நிற்க முடியும் என்பதை உணர்த்துவதற்கு கொண்டுவரப்பட்டது என்றார் அவர். 
இந்த  நிகழ்ச்சியில் திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்ட ஆவின் பால் நிறுவனத் தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன், முன்னாள் திருத்தணி நகர் மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டி மற்றும் எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 199 பயனாளிகளுக்கு தமிழக அரசின் தாலிக்குத் தங்கத்தை எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் திங்கள்கிழமை வழங்கினார்.
கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாநிதி, ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூகப் பாதுகாப்பு அலுவலர் லதா வரவேற்றார்.
நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த  199 பேருக்கு தாலிக்குத் தங்கத்தையும்  ரூ. 39 லட்சத்து 25 ஆயிரம்   திருமண நிதியுதவியையும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.
விஜயகுமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் மு.க.சேகர், தன்ராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் 
பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விரிவாக்க அலுவலர் திருப்பாவை,  பத்மாவதி, ஊர்நல அலுவலர்கள் கும்மிடிப்பூண்டி கலா, பத்மாவதி, எல்லாபுரம் ஜெயலட்சுமி, சாந்தி உள்ளிட்டோர் செய்திருத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com