சுடச்சுட

  
  dmk


  கும்மிடிப்பூண்டியை அடுத்த நேமள்ளூர், கண்ணன்கோட்டை, செதில்பாக்கம், பூவலம்பேடு, கொள்ளானூர், தேர்வாய் ஆகிய பகுதிகளில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
  கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் மணிபாலன் தலைமை வகித்தார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலர் கி.வேணு, தொமுச செயலர் சண்முகம், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
  நேமள்ளூரில், மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி மனோகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, நேமள்ளூரில் சமுதாயக் கூட வசதி வேண்டும், இதுவரை பேருந்து வசதி காணாத பகுதியாக நேமள்ளூர் இருப்பதால், மாதர்பாக்கத்தில் இருந்து சத்தியவேடு மற்றும் கண்ணன்கோட்டை பகுதிக்குச் செல்லும் பேருந்துகளை நேமள்ளூர் வழியாக செல்ல வழி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர்.
  கண்ணன்கோட்டையில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில், கண்ணன்கோட்டை நீர்த் தேக்கத் திட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்காததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை விடுத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai