அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவப் பிரிவு தொடக்கம்
By DIN | Published On : 14th February 2019 06:42 AM | Last Updated : 14th February 2019 06:42 AM | அ+அ அ- |

திருத்தணி அரசு பொது மருத்துமனையில் இயற்கை மருத்துவப் பிரிவு புதன்கிழமை தொடங்கப்பட்டது.
திருத்தணி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், ஏற்கெனவே சித்த மருத்துவப் பிரிவு திறக்கப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை, ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையில் இயற்கை மற்றும் யோகா மருத்துவப் பிரிவு புதன்கிழமை புதிதாகத் தொடங்கப்பட்டது. இப்பிரிவின் மருத்துவராக மோனிகா விஜயகுமார் நியமிக்கப்பட்டு, பணியில் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் மோனிகா கூறுகையில், தமிழகம் முழுவதும், 72 அரசு மருத்துவமனைகளில் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது திருத்தணி அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. தற்போது யோகா, அக்குபஞ்சர், உணவு உண்ணும் முறைகள், வாழை இலை குளியல், மண், நீர் சிகிச்சை அளிக்கப்படும் என்றார் அவர்.