இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
By DIN | Published On : 14th February 2019 06:41 AM | Last Updated : 14th February 2019 06:41 AM | அ+அ அ- |

திருத்தணியில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (பிப். 14) நடைபெறுகிறது.
நண்பகல் 11 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் கூட்டத்தில், திருத்தணி மின்வாரிய கோட்ட அலுவலகத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை மனுவாகவும், புகாராகவும் தெரிவிக்கலாம்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மின்பகிர்மான மேற்பார்வையாளர் கிருஷ்ணகுமார் பங்கேற்கிறார். இதில், மின் விநியோகம் உள்ளிட்ட குறைகள் குறித்த கோரிக்கை மனுவை அளிக்கலாம். மேற்கண்ட தகவலை திருத்தணி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கனகராஜன் தெரிவித்துள்ளார்.