வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் பகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பு மற்றும்

திருவள்ளூர் பகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பு மற்றும் திருத்த முகாமில் இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு படிவங்களை அளித்தனர். இப்பணிகளை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.  
மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் உள்ள 3,583 வாக்குச்சாவடிகளிலும், சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்த்தல் மற்றும் திருத்த முகாம்கள் நடைபெற்றன.
இச்சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்க்க இளைஞர்களும், நீக்கம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், ஒரே தொகுதியில் மற்றொரு பாகத்துக்கு பெயர் மாற்றம் தொடர்பான படிவங்களை செய்ய பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 
ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரையில் படிவங்கள் பெறப்பட்டன. இதில், திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com