முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
ஊராட்சி பிரதிநிதிகளுக்கான கிராம வளர்ச்சித் திட்ட பயிற்சி நிறைவு
By DIN | Published On : 28th February 2019 05:53 AM | Last Updated : 28th February 2019 05:53 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளில் கிராம வளர்ச்சி திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கிராம வளர்ச்சி திட்டம் குறித்து ஊராட்சிதோறும் இரு சமுதாய வள நபர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர், ஊராட்சி செயலர் அடங்கிய குழுக்கள் அடங்கிய 61 ஊராட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது.
9 பிரிவுகளாக இப்பயிற்சி நடத்தப்பட்டது. அதில், கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் அந்தந்த ஊராட்சியை சேர்ந்த குழுவினர் மக்கள் நலத் திட்டம் குறித்து ஆய்வு நடத்தி அதுகுறித்த அறிக்கையை ஊராட்சி செயலர் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சமர்ப்பித்து கிராமங்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. நீண்ட நீடித்த நீர் மேலாண்மை, நல வாழ்வு,வேலை வாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச திட்டங்கள் குறித்தும் இப்பயிற்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிறைவு நிகழ்ச்சிக்கு, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாயாண்டி, பயிற்றுநர்கள் துரைராஜ், வேல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.