முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
ஜெ.ஜெ.கோப்பை கைப்பந்து போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
By DIN | Published On : 28th February 2019 04:06 AM | Last Updated : 28th February 2019 04:06 AM | அ+அ அ- |

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட ஜெ.ஜெ. கோப்பை கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதன்கிழமை பரிசளிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி மேட்டுக் காலனி பகுதியை சேர்ந்த எம்.எல்.எப். பாய்ஸ் அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி ஜெ.ஜெ.கோப்பைக்கான கைப்பந்து போட்டி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் இப்போட்டிகளைத் தொடங்கி வைத்தார். கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த 60 கைப்பந்து அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதிப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
போட்டியில் கும்மிடிப்பூண்டி வெட்டுக்காலனி வி.சி.பிரெண்ட்ஸ் கைப்பந்து அணியினர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றனர். கும்முடிப்பூண்டி எம்.சி.எப். பாய்ஸ் அணி 2-ஆம் இடமும், கும்மிடிப்பூண்டி சிவநேசன் குடியிருப்பைச் சேர்ந்த எஸ்.என்.சி. அணியினர் 3-ஆம் இடமும் பெற்றனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றிய பாசறை நிர்வாகி டி.சி.மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரொக்கப் பரிசுகளை வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை பி.முனுசாமி, கே.பி.செல்வராஜ், புருஷோத்தமன், செல்வதமிழன் உள்ளிட்ட அதிமுகவினர் செய்திருந்தனர்.