முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 28th February 2019 04:07 AM | Last Updated : 28th February 2019 04:07 AM | அ+அ அ- |

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய மாநில மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற டி.ஜே.எஸ். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, டி.ஜே.எஸ். கல்விக் குழுமத் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். டி.ஜெ.எஸ். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பழனி, டி.ஜே.எஸ். பப்ளிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஞானபிரகாசம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி கலந்து கொண்டார். இதில், மாவட்டம் மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
அதேபோல், தேசிய அளவிலான தற்காப்பு கலை சாம்பியன் போட்டியிலும், அறிவியல் ஒலிம்பியாட் குழுமம் சார்பில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியிலும் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.