சுடச்சுட

  

  பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில் சத்துணவின் அவசியம் குறித்து மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் "பாரம்பரிய உணவும், ஆரோக்கியமான வாழ்வும்' என்ற தலைப்பில் உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இ.கே.உதயசூரியன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சசிகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக  பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.எஸ்.ஜீவானந்தம் பங்கேற்று மாணவியர் அமைத்திருந்த உணவுக் கண்காட்சியை பார்வையிட்டார்.
  இதில் ஐவகை உணவு, கொழுப்பு நீர், வைட்டமின், தாதுக்கள் ஆகிய சத்துக்கள் உள்ள உணவு, இயற்கை முறையில் தயாரான உணவு, ஒவ்வாத உணவு உள்பட பல்வேறு விதமான உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  
  வளரும் பருவத்தில் மாணவியர் சத்து நிறைந்த  இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்றும், படிப்பில் ஆர்வம், சுறுசுறுப்பு பெருகும் என்றும், கல்வி வளர்ச்சிக்கு சத்து நிறைந்த உணவுகள் உதவியாக இருக்கும் என்றும் ஆசிரியர்கள் மாணவியருக்கு எடுத்து கூறினர்.
  உணவுத் திருவிழாவுக்கு கொண்டு வந்த பல்வேறு வகையான உணவுகளை மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பகிர்ந்து சாப்பிட்டனர். இதையடுத்து பள்ளியில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. கல்வி, விளையாட்டு, ஒழுக்கத்தில் சிறந்த மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி மாணவியர் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஏ.வி.சோமன், எஸ்.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai