சுடச்சுட

  

  புழல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வேலூரைச் சேர்ந்தவர் ஷாகுல் அகமது(40). இவருடைய மனைவி தபு(35). மகள் ஜெபின்தாஜ்(6). இவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புழலை அடுத்த புத்தகரம் திருமால் நகர் 5-ஆவது தெருவில் குடியேறினர். ஷாகுல் அகமது கடந்த 3 மாதங்களாக புத்தகரம் வேல்முருகன் நகரில் கடைவைத்து செல்லிடப்பேசிகளை விற்பனை செய்து வந்தார். 
  இந்நிலையில், வியாழக்கிழமை இரவு சாகுல் அகமது உள்ளிட்ட 3 பேரும் வீட்டில் தூங்கச் சென்றனர். வெள்ளிக்கிழமை காலை வீட்டை விட்டு யாரும் வெளியில் வராததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸார் வந்து ஷாகுல் அகமது வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது, ஷாகுல் அகமது, தபு, ஜெபின்தாஜ் ஆகிய 3 பேரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.  மூவரின் சடலங்களையும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புழல் காவல் ஆய்வாளர் நடராஜ் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடன் சுமையால் ஷாகுல் அகமது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai