சுடச்சுட

  

  அரசுப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்: ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை

  By  திருத்தணி,  |   Published on : 13th January 2019 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் நடப்பாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற முயற்சி எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறினார்.
   திருத்தணி கல்வி மாவட்டத்தில் உள்ள 24 அரசு மேனிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அரையாண்டு தேர்வு தேர்ச்சி சதவீதம் குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு நடுநிலைபள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருத்தணி கல்வி மாவட்டகல்வி அலுவலர் முனிசுப்புராயன் தலைமை வகித்தார்.
   இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் பேசியது: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களை நடப்பாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்றுதர ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். வரும் 22 ம் தேதி முதல் முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்க உள்ளது.
   அரசு பொதுத்தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் மாணவர்களை காலை, மாலை நேரங்களில் கூடுதலாக படிக்க செய்ய வேண்டும். மேலும் பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ், பிளஸ் 2 அறிவியல் செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்புகள் இன்னும் சில தினங்களுக்குள் பள்ளிக் கல்வித்துறையில் இருந்து பெறப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் இ மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
   தொடர்ந்து திருத்தணி கல்வி மாவட்டத்தில் உள்ள 24 பள்ளிகளில் இருந்து வந்திருந்த அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அரையாண்டு தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அரையாண்டு தேர்வில் 80 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் தந்த பாட சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் காரணத்தை கேட்டறிந்தார். பின்னர் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
   நிகழ்ச்சியில் திருத்தணி கல்வி மாவட்ட அலுவலக அலுவலர் அன்பழகன், திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிர மணியம், பெண்கள் பள்ளிதலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப், பொதட்டூர்பேட்டை ஆண்கள் மேனிலை பள்ளி தலைமை ஆசிரியர் கணபதி, அம்மையார்குப்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai