சுடச்சுட

  

  பாடியநல்லூர் உயர் கோபுர மின்விளக்கை திருவள்ளூர் எம்.பி. பி.வேணுகோபால், எம்எல்ஏ வி.அலெக்ஸாண்டர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
   திருவள்ளூர் எம்.பி. மேம்பாட்டு நிதியில் இருந்து சோழவரம் ஒன்றியத்தில் 50 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இதன் திறப்பு விழா சோழவரம் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் பி.கார்மேகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
   பாடியநல்லூர் கோயில் விளையாட்டு மைதான வளாகம், ஆட்டந்தாங்கல் புதிய மேம்பாலம், டாக்டர் சிவந்தி ஆதித்தனர் நகர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட உயர்
   கோபுர மின்விளக்குகளை, திருவள்ளூர் எம்.பி. பி.வேணுகோபால், அதிமுக மாவட்டச் செயலரும், அம்பத்தூர் எம்எலல்ஏவுமான வி.அலெக்ஸாண்டர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
   இந்த விழாவில் அதிமுக மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜி.ராஜேந்திரன், தலைமை பொதுக் குழு உறுப்பினர் எஸ்.மனோகரன், நல்லூர் ஊராட்சி கழக செயலாளர் எஸ்.எம்.சீனிவாசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai