சுடச்சுட

  


  திருவள்ளூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புகையில்லா போகி கொண்டாட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். 
  பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பரமானந்தம், தேசிய மாணவர் படை அலுவலர் சா.அருணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் தலைமை ஆசிரியர் ரேவதி கலந்து கொண்டு மாணவ, மாணவியர் பங்கேற்ற புகையில்லா போகி விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கி வைத்தார். 
  இப்பேரணி கடம்பத்தூர்-பேரம்பாக்கம் சாலையில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பள்ளி வளாகம் முன் நிறைவடைந்தது. 
  இதில், போகிப் பண்டிகையை புகையில்லா போகியாகக் கொண்டாடுவோம் என்பதை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி, கோஷமிட்டவாறு மாணவ, மாணவியர் சென்றனர். 
  நிகழ்வில், உதவி தலைமையாசிரியர் வா.பாலமுருகன், தேசிய மாணவர் படை அலுவலர் சா.அருணன் உடற்கல்வி ஆசிரியர்கள் சி.சிவக்குமார், வனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  சேவாலயா சார்பில்...
  திருவள்ளூர் அருகே கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா மூலம் செயல்பட்டு வரும் பாரதியார் மேல்நிலைப் பள்ளி சார்பில், புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி பாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
  பேரணிக்கு சேவாலயா அறக்கட்டளையின் நிர்வாகி முரளிதரன் தலைமை வகித்தார். வெங்கல் காவல் ஆய்வாளர் ஜெயவேல் பங்கேற்று, பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 
  இப்பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்துப் பணியாளர்களும் கலந்து கொண்டனர். பேரணியில் சென்ற மாணவ, மாணவியர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
  பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, பாக்கம், புலியூர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai