கள்ள நோட்டு அச்சடித்தவர் கைது

ஊத்துக்கோட்டை பகுதியில் ரூ. 2,000 கள்ள நோட்டு அச்சடித்ததாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.


ஊத்துக்கோட்டை பகுதியில் ரூ. 2,000 கள்ள நோட்டு அச்சடித்ததாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம், புனே நகர போலீஸார் ரூ. 2 ஆயிரம், 500 கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேரூராட்சிக்கு உள்பட்ட பாலாஜி நகர் 4-ஆவது தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் (44) அச்சு இயந்திரம் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில், வெங்கடேசனைப் பிடிக்க புனே மாநகர காவல் துணைக் கண்காணிப்பாளர் டெங்காலி தலைமையில், 6 பேர் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை பொன்னேரி வந்தனர். 
ஆனால் குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் வெங்கடேசனின் செல்லிடப்பேசிக்கு தொடர்பு கொண்டபோது, ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெய்வேலி ஐடியல் சிட்டி பகுதி, செல்பேசி கோபுர சிக்னல் மூலம் வெங்கடேசன் தங்கி இருந்த பகுதி இருப்பது தெரியவந்தது. போலீஸார் அப்பகுதிக்குச் சென்று விசாரித்தனர். வீட்டின் கதவை செவ்வாய்க்கிழமை அதிகாலை போலீஸார் தட்டினர். வெளியே வந்த வெங்கடேசன், போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
பின்னர், அங்கிருந்து, கள்ள நோட்டுகள் அடிக்க பயன்படுத்திய வண்ண அச்சு இயந்திரம் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ. 2 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 500 நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, வெங்கடேசனை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புனேவுக்கு அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com