எம்ஜிஆர் பிறந்த நாள்: அதிமுகவினர் மரியாதை

திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி திருவள்ளூரில் முன்னாள் நகர் மன்றச் செயலர் கமாண்டோ பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் செவ்வை சம்பத்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்வில் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
புட்லூரில்...: புட்லூரில் அதிமுக ஒன்றியச் செயலர் புட்லூர் 
ஆர்.சந்திரசேகர் தலைமையில் 
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 
கடம்பத்தூர் ஒன்றியம் மணவாளநகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவுக்கு ஒன்றியச் செயலர் சுதாகர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நேசன், துக்காராம், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
அமமுக சார்பில்...: திருவள்ளூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற 
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவுக்கு முன்னாள் எம்எல்ஏ-வும் மாவட்டச் செயலருமான டி.ஏ.ஏழுமலை தலைமை வகித்தார். நிகழ்வில் அமமுக நகர நிர்வாகி சுரேஷ், ராஜசேகர், சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து அக்கட்சியினர் எம்.ஜி.ஆர். உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
கும்மிடிப்பூண்டியில்...: கும்மிடிப்பூண்டி பஜாரில் அதிமுக சார்பில் நகரச் செயலர் மு.க.சேகர் தலைமையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவுக்கு அதிமுக நிர்வாகிகள் ராஜேந்திரன், இமயம் மனோஜ், கேசவன், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்த அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
அதேபோல், எளாவூரில் முன்னாள் மாணவரணி மாவட்டச் செயலர் முல்லைவேந்தன் தலைமையிலும், பெரிய ஓபுளாபுரத்தில் வளையாபதி தலைமையிலும் 
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
திருத்தணியில்...
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவையொட்டி, திருத்தணி மற்றும் 
ஆர்.கே.பேட்டையில் வியாழக்கிழமை ஏழைகளுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் சிறப்பாகக் கொண்டாடினர்.
 திருத்தணி நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 102 -ஆவது பிறந்த நாளையொட்டி, நகராட்சி அலுவலகம், காந்தி சாலை, பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, அண்ணாநகர் ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆர். சிலை மற்றும் அவரது உருவப் படத்துக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  
 திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் தலைமையில், எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 
அதேபோல், திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்ட ஆவின் தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன் எம்.ஜி.ஆர். உருவப் படத்துக்கு  மாலை அணிவித்து, ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினார். 
 அரக்கோணம் மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர் மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில், முன்னாள் நகர் மன்றத் துணைத் தலைவர் மாசிலாமணி, முன்னாள் கவுன்சிலர்கள் கேபிள் எம். சுரேஷ், திருத்தணி வேளாண்மைக் கூட்டுறவு விற்பனையாளர் சங்கத் தலைவர் ஜெயசேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்: திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு, திருத்தணி ஒன்றிய இளைஞரணி செயலர் வேலஞ்சேரி எஸ். பழனி தலைமை வகித்தார்.
இதில், திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத் தலைவர் எஸ். ஜெய்சங்கர், ஒன்றியப் பொருளாளர் பத்மாபுரம் சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி என். சேட்டு, முருக்கம்பட்டு ஊராட்சி செயலர் ஜோதி, சத்திரம்ஜெயபுரம் ஊராட்சி செயலர் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com