ரூ.25 லட்சத்தில் அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு, சேமிப்பு மையம்

திருத்தணி அரசு மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் செலவில் ரத்த சுத்திகரிப்பு மற்றும் ரத்தம் சேமிக்கும் மையம் ஆகியவற்றை
ரூ.25 லட்சத்தில் அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு, சேமிப்பு மையம்


xதிருத்தணி அரசு மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் செலவில் ரத்த சுத்திகரிப்பு மற்றும் ரத்தம் சேமிக்கும் மையம் ஆகியவற்றை அரக்கோணம் மக்களவை உறுப்பினர் கோ. அரி, திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினர்  பி.எம்.நரசிம்மன் ஆகியோர் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தனர். 
திருத்தணி அரசு மருத்துவமனையில், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, ரத்தம் சேமிக்கும் மையம் புதிதாக ஏற்படுத்தப்பட்டது. இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் தயாளன் தலைமை வகித்தார். மாவட்ட துணை இயக்குநர் (குடும்ப நலம்) இளங்கோவன் முன்னிலை வகித்தார். 
அரசு  மருத்துவமனை தலைமை மருத்துவர் ஹேமாவதி வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக அரக்கோணம் எம்.பி. கோ.அரி, திருத்தணி எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் ஆகியோர் பங்கேற்று இம்மையத்தை திறந்து வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களுக்கு 16 பொருள்கள் அடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகத்தை வழங்கினர்.
பின்னர், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் தயாளன் கூறியது: புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இரண்டு ரத்த சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் தினசரி 6 நோயாளிகளுக்கு ரத்தம் சுத்திகரிப்பு செய்ய முடியும். 
தற்போது, திருத்தணி, திருவள்ளூர், ஆவடி, பொன்னேரி ஆகிய அரசு மருத்துவமனைகளில் ரத்த சுத்திகரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. விரைவில், மாதவரம் அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது என்றார் அவர். 
நிகழ்ச்சியில், காஞ்சி - திருவள்ளூர் மாவட்ட ஆவின்பால் தலைவர் வேலஞ்சேரி த. சந்திரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் டி. சவுந்தர்ராஜன், ஜெயசேகர்பாபு, முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர் கேபிள் எம்.சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com