மணல் கடத்தலுக்கு துணைபோவோர் மீது நடவடிக்கை:  லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

திருவள்ளூர் பகுதியில், மணல் கடத்தலுக்கு துணைபோவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் மற்றும்

திருவள்ளூர் பகுதியில், மணல் கடத்தலுக்கு துணைபோவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மணல் லாரி உரிமையாளர்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமையில், அச்சங்கத்தின் நிர்வாகிகள் காதர் மைதீன், அகத்தியன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி ஆகியோரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பது: மாநில அளவில் கலப்பட மணல் விநியோகம் மற்றும் மணல் கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரிடம் ரூ.5 கோடி வரையில் அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இருந்தும்கூட, ஆற்றுப் படுகைகளில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. 
இதற்குக் காரணமான கனிமவளத்துறை அதிகாரிகள் சிலர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, மாவட்டத்தில் உள்ள லாரி உரிமையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிலர், பினாமி பெயர்களில் லாரிகளை வாங்கி, கனிம வளத்தை கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், கலப்பட மணல் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பு பாடியநல்லூரில் கோயில் நிலத்தில் இயங்கி வந்த கலப்பட மணல் விநியோகக் கிடங்கை  மாவட்ட நிர்வாகம் தடை செய்தது. ஆனாலும், அதே ஊராட்சியில் உள்ள வேறு கிடங்குகளிலும், ஆடந்தாங்கல், புள்ளிலைன் ஆகிய ஊராட்சிகளிலும் கலப்பட மணல் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு கனிம வளத்துறை அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோர் உடந்தையாக இருக்கின்றனர்.  எனவே, இந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com