சுடச்சுட

  

  பத்தாம் வகுப்பு மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவை இணையதளத்தில் செய்ய ஏற்பாடு

  By DIN  |   Published on : 10th July 2019 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகளை அந்தந்த பள்ளிகள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 
   இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
   பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011-ஆம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தின்  w‌w‌w.‌t‌n‌v‌e‌l​a‌i‌v​a‌i‌p‌p‌u.‌g‌o‌v.‌i‌n  இணையதள முகவரியில் பதிவு செய்து, அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கு அரசால் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. 
  இதுபோன்று செய்வதன் மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வருவதைத் தவிர்ப்பதுடன், மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்துச் செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.
    இதைக் கருத்தில் கொண்டு, தற்போது 2019-ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை (ஜூலை 10) வழங்கப்பட உள்ளது. 
  இதைத் தொடர்ந்து, 10-ஆம் தேதி முதல் 24 வரையில் 15 நாள்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கப்பட உள்ளது.
   அத்துடன், மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. 
  அதேபோல், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்திலேயே பதிவு செய்யலாம் அல்லது அந்தந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பதிவு செய்து பயன்பெறலாம். 
  இப்பதிவின் போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி, மாணவ, மாணவிகள் பதிவு செய்து பயன்பெறலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai