நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கு: மத்தியக் குழுவினர் பங்கேற்பு

நீர் மேலாண்மை குறித்து மத்தியக் குழுவினர் பங்கேற்ற கருத்தரங்கு திருவள்ளூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கு: மத்தியக் குழுவினர் பங்கேற்பு


நீர் மேலாண்மை குறித்து மத்தியக் குழுவினர் பங்கேற்ற கருத்தரங்கு திருவள்ளூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் நீர் மேலாண்மைப் பணிகள் குறித்து ஆலோசிக்க மத்தியக் குழுவினர் தமிழகம் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நீர் மேலாண்மை பணிகள் குறித்த கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். மத்தியக் குழுவின் தலைவர் மம்தா சங்கர், உறுப்பினர்கள் செளமேந்திர சந்தா, திபாகர் மெகந்தா, ஏ.எம்.மணிச்சன், சைதுல் ஹக், சுதிர் சந்திர ஜனா, பி.கே.சாஹு, வி,கே.ராஜன், ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து முதல் நிலை அலுவலர்களும் கலந்துகொண்டு, மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீர் விநியோகம், பணிகள் குறித்து விளக்கினர். தொடர்ந்து, மாவட்டத்தில் நீர்நிலைகள் குறைவாக உள்ள பகுதிகளை அடையாளப்படுத்தி, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்கள் குறித்து குழுவினருக்கு ஆட்சியர் விளக்கினார்.
இதில், 5 முதல் 6 குறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு, அம்பத்தூர், ஆவடி, மதுரவாயல், திருவொற்றியூர், பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் குழுக்களாகப் பிரித்து, ஆய்வுகள் மேற்கொள்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், ஆய்வு மேற்கொள்ளும் மத்திய குழுவினரை வரவேற்று, அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், நுங்கம்பாக்கம் ஏரியையும், சிறு தடுப்பணையையும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், மத்திய நீர் மேலாண்மைக் குழுத் தலைவர் மம்தா சங்கர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com