சாலை விபத்தில் பொறியாளர் பலி
By DIN | Published On : 13th July 2019 10:37 AM | Last Updated : 13th July 2019 10:37 AM | அ+அ அ- |

இருசக்கர வாகனத்தில் சென்ற பொறியாளர் சாலை விபத்தில் இறந்தார்.
ஆரணியைச் சேர்ந்த ராஜாவின் மகன் லயனல் (25). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.
அவர் வியாழக்கிழமை பணிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். புதுவாசலில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் செவிட்டு பனப்பாக்கம் என்ற பேருந்து நிறுத்தம் அருகில் சென்றபோது முன்னால் சென்ற பைக்கை ஓட்டியவர் சைகை காட்டாமல் வலது புறம் திரும்பினார்.
இதனால், லயனல் நிலைதடுமாறி தனக்கு முன் சென்ற வாகனத்தில் மோதி தூக்கி வீசப்பட்டார். தலையில் படுகாயத்துடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வெள்ளிக்கிழமை காலையில் இறந்தார். இதனிடையே, மற்றொரு பைக்கை ஓட்டிச் சென்றவர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ஆரணி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.