தர்மராஜா கோயில் கும்பாபிஷேகம்

பெரியபாளையத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பெரியபாளையத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலில் அண்மையில் கோயில் புதிய கொடிமரம், பலிபீடம் ஸ்தாபிக்கப்பட்டு, கோயில் நுழைவு வழியில் புதிய வளைவு கட்டப்பட்டது. 
அதில் கருடன், அனுமன், திரௌபதி சிலைகள் நிர்மாணிக்கப்பட்டன. இதையடுத்து கோயிலுக்கு கும்பாபிஷேகத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை பந்தக்கால் நடப்பட்டது. செவ்வாய்க்கிழமை கணபதி பூஜை நடைபெற்றது. புதன்கிழமை சுவாமிக்கு தீபாராதனை, சிலைகள் கரிகோலம், வீதி உலா, அஷ்ட பந்தனம், மூன்றாம் கால பூஜை, மகா அபிஷேகம் நடைபெற்றன. 
இந்நிலையில், கோயிலில் வியாழக்கிழமை காலையில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com