சுடச்சுட

  

  முருகன் மலைக்கோயிலில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை நாய்கள் விரட்டிக் கடித்ததால் புள்ளிமான் உயிரிழந்தது.
   திருத்தணி முருகன் மலைக்கோயில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை புள்ளிமான் தண்ணீர் தேடி திருத்தணி பகுதிக்கு வந்தது.
   அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் விரட்டிக் கடித்ததில், புள்ளிமான் உயிரிழந்தது. தகவலறிந்த திருத்தனி தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று மானை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வனத் துறையினர் புள்ளிமானை பிரேதப் பரிசோதனை செய்து காட்டுவளம் காட்டுப் பகுதியில் புதைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai