சுடச்சுட

  


  தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 979 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
  திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், அம்பத்தூர், பூந்தமல்லி, திருவொற்றியூர், பொன்னேரி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் இணைந்து மக்கள் நீதிமன்றத்தை நடத்தின. 
  இந்த நிகழ்வுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தேசிய மக்கள் நீதிமன்ற மாவட்ட முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான ஜெ.செல்வநாதன், திருவள்ளூர் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி தீப்தி அறிவுநிதி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி  மெவிஸ் தீபிகா சுந்தரவதனா ஆகியோர் பங்கேற்றனர்.
  தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஜா, மோட்டார் வாகன விபத்து சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி அருந்ததி, சார்பு நீதிமன்ற நீதிபதி உமா, மாவட்ட முன்சீப் சுபாஷிணி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்களான ராதிகா, இளவரசி, பயிற்சி நீதிபதிகள், வழக்குரைஞர்கள், வங்கி அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 4,738 வழக்குகள் சமரசத் தீர்வுக்கு எடுக்கப்பட்டு 774 வழக்குகள் முடிக்கப்பட்டன. ரூ.21 கோடியே 34 லட்சத்து 60 ஆயிரத்து 973 மதிப்புடைய விஷயங்களுக்குத் தீர்வு காணப்பட்டது.
  அதேபோல், நிலுவையில் இல்லாத 4,886 வழக்குகள் சமரசத் தீர்வுக்கு எடுக்கப்பட்டு 205 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 2 கோடியே, 52 லட்சத்து, 88 ஆயிரத்து, 689 மதிப்பிற்குத் தீர்வு காணப்பட்டது. ஒட்டுமொத்தமாக மக்கள் நீதி மன்றத்தில் 979 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai